1. Home
  2. தமிழ்நாடு

பகிரங்க மன்னிப்பு கேட்டார் அன்புமணி! என் மீது ஏதாவது கோபம் இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்..!

Q

திருவள்ளூரில் நடந்த கட்சி பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி பேசியதாவது: திருவள்ளூரில் 1,700 ஏக்கர் விவசாய நிலத்தைப் பிடுங்கி, அறிவுசார் நகர் அமைக்க உள்ளனர். அதனை விடமாட்டோம். இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டியதும், சுயமரியாதையுடன் வாழ வைப்பதும் மத்திய, மாநில அரசுகளின் கடமை.
ஆனால், மக்கள் சாலைகளிலும், சாக்கடைகளிலும் போதையில் படுத்துள்ளனர்.
சமூக நீதிக்காக பா.ம.க.,வை தொடங்கினார் ராமதாஸ். பல போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை. முதல்வருக்கு சமூக நீதி என்பதே தெரியவில்லை. வரும் 2026ம் ஆண்டு பா.ம.க., கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி நடக்கும். பா.ம.க.,வும் ஆட்சி செய்ய வேண்டும். அப்போது தான் சமூக நீதியை நிலை நாட்ட முடியும். தி.மு.க., ஆட்சி முடிவுக்கு கவுன்டவுன் இன்று இருந்து தொடங்கி விட்டது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்.
தமிழகத்தில் மாறி, மாறி ஆட்சி அமைக்க பா.ம.க., உதவுவதால் எந்த பயனும் இல்லை. ராமதாஸ் உள்ளிட்ட உலகில் உள்ள அனைத்து தந்தையர்களுக்கும் என்னுடைய தந்தையர் தின வாழ்த்துக்கள், பாரட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். ராமதாஸ் நீண்ட ஆயுள் உடன் வாழ வேண்டும். ராமதாஸ் 100 ஆண்டுகளுக்கு மேல், மன நிம்மதியுடன், நல்ல உடல் நலத்துடன், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். மகனாக அது என் கடமையும் கூட.
ராமதாஸ் அவர்களே வருத்தப்படாதீர்கள், கோபப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். ஒரு மகனாக, கட்சியின் தலைவராக அதனை சுலபமாகச் செய்துவிட்டுப் போகலாம். நீங்கள் உருவாக்கிய கட்சி இது. உங்கள் கனவுகளை நனவாக்குவோம். இவ்வாறு அன்புமணி பேசினார்.
ராமதாசுக்கு என் மீது ஏதாவது கோபம் இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்; தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒரு பெரிது அல்ல. அதேவேளையில் ராமதாஸ் 100 ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். ராமதாசுக்கு சுகர், இரத்த அழுத்தம் இருக்கிறது. நீங்கள் சொல்லுங்கள், மகனாக, கட்சி தலைவனாக நான் செய்கிறேன்.

Trending News

Latest News

You May Like