ஆன்மிக பாத யாத்திரையை நிறைவு செய்தார் ஆனந்த் அம்பானி!

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி. இவர் தமது 30வது பிறந்த நாளை முன்னிட்டு குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருந்து 170 கி.மீ., ஆன்மிக பாத யாத்திரை மேற்கொண்டார்.
இந்த பயணம், ஜாம் நகரில் இருந்து துவாரகாதீஷ் கோவிலுக்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. கடந்த மார்ச் 29ம் தேதி தனது பாதயாத்திரையை ஆனந்த அம்பானி தொடங்கினார். தினமும் 12 கி.மீ., முதல் 15 கி.மீ., வரை நடந்தார். பெரும்பாலும் அவரின் பயணம் இரவு நேரங்களில் தான் இருந்தது.
ஆனந்த் அம்பானியின் பாத யாத்திரை பயணம், இந்து நாட்காட்டியின் படி அவரது பிறந்த நாளான இன்று நிறைவு பெற்றது. ராமநவமி நாளான இன்று (ஏப்.6) துவாரகாதீஷ் கோவிலுக்கு சென்று பயணத்தை பூர்த்தி செய்தார். அங்கு அவரது தாயார் நீடா அம்பானி, மனைவி ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர் ஆனந்த் அம்பானியை சந்தித்தனர்.