மேடையில் கையெடுத்து கும்பிட்ட புஸ்ஸி ஆனந்த்..!!
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சினிமா நட்சத்திரங்கள் அரசியல் தலைவர்கள் யார் பங்கேற்பாளர்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் காலை முதலே மாநாட்டு திடலில் விஜய் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் குவிய தொடங்கினர். அதில் சிலர் சேர்கள் மீது ஏறி நிற்பது, ஸ்பீக்கர் பெட்டிகள் மீது ஏறி நிற்பது போன்ற சேட்டைகளை செய்தனர். இதை பார்த்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தயவு செய்து கீழே இறங்கவும் என கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டார்.