சாலையோரம் உறங்கிய மூதாட்டி பாலியல் வன்கொடுமை... வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள் !
மதுரை மாவட்டம் சோழவந்தான் மார்கெட்ரோடு பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி, அப்பகுதியில் யாசகம் பெற்று அங்குள்ள கடை முன் இரவு தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இத்தனை நாட்கள் இரவும் வழக்கமானதாக சென்றது.
ஆனால், நேற்று இரவு மூதாட்டி கடை முன் தூங்கியபோது அங்குவந்த இளைஞர் ஒருவர் திடீெரன மூதாட்டியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மூதாட்டியை கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து இளைஞர் தப்பியோட முயன்றுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் சோழவந்தான் காவல் நிலையத்தில் கண்காணித்த போலீசார் உடனடியாக விரைந்து சென்று இளைஞரை மடக்கிபிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் சோழவந்தான் அருகே கருப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பதும் மூதாட்டியை கொலை செய்துவிட்டு தப்ப முயன்றதை வாலிபர் ஒப்புக்கொண்டார்.
இதனை தொடர்ந்து வாலிபர் மணிமாறனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட மணிமாறன் மீது இரு கொலை வழக்கு உட்பட 6 வழிப்பறி, கஞ்சா விற்பனை போன்ற பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து கடந்து 10 நாட்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்துள்ளார். தற்போது மீண்டும் சிறைக்கு சென்றார்.
மதுரை சோழவந்தானில் 75வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலை மடக்கிபிடித்த போலீசார் பரபரப்பு சி.சி.டிவி காட்சிகள் வெளியீடு வாலிபர் கைது #crime #Madurai pic.twitter.com/757vRYly7p
— divakar (@divakar27902843) November 23, 2021
newstm.in