1. Home
  2. தமிழ்நாடு

ஃப்ரீஸர் பாக்ஸில் உயிருடன் இருந்த முதியவர் உயிரிழப்பு! சிக்கலில் தனியார் மருத்துவமனை !

ஃப்ரீஸர் பாக்ஸில் உயிருடன் இருந்த முதியவர் உயிரிழப்பு! சிக்கலில் தனியார் மருத்துவமனை !


சேலம் கந்தம்பட்டி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சரவணன் (70) என்பவர் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். அதாவது மூத்த சகோதரன் பாலசுப்பிரமணிய குமார் (74), தங்கை மகள்கள் ஜெயஸ்ரீ (50), கீதா (48) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சரவணன் ஏற்காடு பகுதியில் உள்ள தனியார் பிரீசர் பாக்ஸ் நிறுவனத்திற்கு போன் செய்து சடலத்தை வைக்க பிரீசர் பாக்ஸ் அனுப்புங்கள் எனக் கேட்டுள்ளார்.அதன்படி அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிரீசர் பாக்சை கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் இறந்தவர் உடல் எங்கே என கேட்டுள்ளனர். அப்போது தனது அண்ணன் இறந்துவிட்டார், தனியார் மருத்துவமனையில் இருந்து வருகிறது, நீங்கள் பிரீசர் பாக்சை இறக்கி விட்டு செல்லுங்கள் என கூறியுள்ளார்.

இதனையடுத்து மறுநாள் 2 மணி அளவில் பிரீசர் பாக்சை எடுக்க அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன் வீட்டிற்கு சென்றனர். அப்போது பிரீசர் பாக்சில் முதியவர் ஒருவர் உயிரோடு துடிதுடித்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஊழியர்கள் அவரை மீட்க முயன்றபோது, வெளியே எடுக்கக்கூடாது என சரவணனும், ஜெயஸ்ரீயும் தடுத்துள்ளனர்.

இதுபற்றி அவர்கள் சூரமங்கலம் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தனது அண்ணன் இறந்துவிட்டார், அவரது ஆன்மா பிரிய வேண்டும் என்பதற்காக பிரீசர் பாக்சில் வைத்துள்ளோம் என சரவணன் கூறியுள்ளார்.

ஃப்ரீஸர் பாக்ஸில் உயிருடன் இருந்த முதியவர் உயிரிழப்பு! சிக்கலில் தனியார் மருத்துவமனை !

ஆத்திரம் அடைந்த போலீசார், அதிரடியாக உள்ளே நுழைந்து பிரீசர் பாக்ஸில் உயிருக்கு போராடிய முதியவர் பாலசுப்பிரமணிய குமாரை மீட்டனர். அங்கு வந்திருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மருத்துவமனை அழைத்துச்சென்றனர். பின்னர் இருவரையும் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், முதியவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, முதியவரை குளிர் பதனப் பெட்டிக்குள் வைத்த அவரது மூத்த தம்பி சரவணன் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஃப்ரீஸர் பாக்ஸில் உயிருடன் இருந்த முதியவர் உயிரிழப்பு! சிக்கலில் தனியார் மருத்துவமனை !

இதுதொடர்பாக அவர்களது முதற்கட்ட விசாரணையில், பாலசுப்பிரமணியகுமார் உயிரோடு இருக்கும்போதே, அஸ்தம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று, அவருக்கு இறப்புச் சான்றிதழ் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like