1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவிற்கு எளிய இலக்கு...! 79 ரன்கள் எடுத்தால் வெற்றி..!

1

 2ஆவது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸ் விளையாடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36 ரன்னும் எடுத்தனர். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் விராட் கோலி பொறுப்புடன் ஆடி 46 ரன்னில் அவுட்டானார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்நிலையில், 98 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது.ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே களத்தில் இருந்த டேவிட் பெடிங்கம் 11 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த மார்கோ ஜான்சன் மட்டும் 11 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒன்றை இலக்கில்  ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து இழந்தனர். அதன்படி  கேசவ் மகாராஜ் 3,  ககிசோ ரபாடா 2, லுங்கி நிகிடி 8 ரன்கள் எடுத்தனர். இருப்பினும் ஐடன் மார்க்ராம் மட்டும் நிதானமாகவும், சிறப்பாகவும் விளையாடி 103 பந்தில் சதம் விளாசி 106 ரன்கள் எடுத்தார். இதில் 17 பவுண்டரி, 2 சிக்ஸர் அடங்கும்.

இறுதியாக தென்னாபிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.  இதனால் தென்னாபிரிக்க அணி 78 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி  தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கவுள்ளது. 

Trending News

Latest News

You May Like