ஒரு அற்புதமான காதல் பாடல்...அமரன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது..!

சமீபகாலமாக வித்யாசமான கதையம்சம் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் அமரன் திரைப்படமும் ஒன்று. தன் திரைப்பயணத்தில் முதல் முறையாக முழுக்க முழுக்க சீரியஸான ஒரு படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அமரன் படத்திற்காக தன் உடல் மொழியை டோட்டலாக மாற்றியுள்ளார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் இப்படத்தில் ராணுவ வீரராக நடிக்கின்றார் சிவகார்த்திகேயன். அதற்காக கடுமையாக உழைத்தும் இருக்கின்றார். அது அமரன் படத்தின் டீசர் மற்றும் கிலிம்ஸ் வீடியோவை பார்க்கும்போது நமக்கு தெரிகின்றது.
இப்படத்தின் அறிவிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது. அதனைத்தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக படக்குழுவினரின் கடுமையான உழைப்பில் அமரன் திரைப்படம் தயாராகியுள்ளது. இதுவரை படப்பிடிப்பே நடக்காத பல இடங்களில் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. காஷ்மீரில் பல இடங்களில் இதுவரை படப்பிடிப்பு நடக்காத இடங்களில் படப்பிடிப்பை நடத்தியிருக்கின்றனர்.
இந்நிலையில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் இருந்து ஏற்கனவே “ஹே மின்னலே” என்று முதல் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது.
இரண்டாம் பாடல் பற்றிய அப்டேட்டை ஜிவி பிரகாஷ் பகிர்ந்துள்ளார். அதாவது, ஹே மின்னலே போலவும் அமரன் படத்தின் இரண்டாவது பாடலும் ஒரு அற்புதமான காதல் பாடலாக இருக்கும் என்று ஜிவி பிரகாஷ் அவரது X தளத்தில் கூறியுள்ளார்.
தற்போது அந்த பாடல் வெளியானது.
my next single from #amaran is OUT NOW
— G.V.Prakash Kumar (@gvprakash) October 17, 2024
➡️ https://t.co/JPKmHikdF4 #Amaran#AmaranDiwali #AmaranOctober31
A Film By @Rajkumar_KP @ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Sai_Pallavi92 @anbariv @RKFI @turmericmediaTM @Dop_Sai @rajeevan69 @magizhmandram…