1. Home
  2. தமிழ்நாடு

சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி தொடரும்: டிடிவி தினகரன்!

Q

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு சசிகலாவால் அதிமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனை, எடப்பாடி பழனிசாமி தரப்பு அமைச்சர்கள் ஒன்றுசேர்ந்து கட்சியில் இருந்து நீக்கினர். இதற்கு பாஜக தரப்பும் மறைமுக காரணம் என அப்போது பேசப்பட்டது. அதுமட்டுமின்றி இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் சோதனையும் நடத்தப்பட்டது. சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தினகரன், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக நின்று வென்று திரும்பிப் பார்க்க வைத்தார். 2018ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். 2019 மக்களவைத் தேர்தலில் சிறு சிறு கட்சிகளுடன், 2021 சட்டமன்றத் தேர்தலை தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். எனினும், ஒரு தொகுதியில் கூட அவரால் வெற்றிபெற முடியவில்லை.
இந்த நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அமமுக. தேனி தொகுதியில் டிடிவி தினகரனும், திருச்சி தொகுதியில் செந்தில் நாதனும் பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் போட்டியிட்டனர். ஆனாலும், தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி தோல்வியைத் தழுவியது. அதே சமயம் நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பிரதமராக நரேந்திர மோடி 3வது முறையாக மீண்டும் இன்று பதவியேற்கிறார்.

இந்த விழாவில் கலந்துகொள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், டிடிவி தினகரன் டெல்லி சென்றுள்ளார். அங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை தமிழகத்தில் பலப்படுத்த வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் அமமுக கூட்டணி தொடரும். வலுவான கூட்டணியை அமைத்து தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உறுதியாக வாய்ப்பு உள்ளது” என்று அறிவித்துள்ளார்.
முன்னதாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி அமைத்து இருந்தால் திமுக இவ்வளவு இடங்களில் வெற்றி பெற்றிருக்காது என கருத்து இரண்டு கட்சி வட்டங்களிலும் எழுந்துள்ளது. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இந்த சூழலில் கூட்டணி தொடரும் என அமமுக தற்போதே அறிவித்துள்ளது முக்கியமானதாக மாறியுள்ளது.

Trending News

Latest News

You May Like