1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் தமிழகம் வருகிறார் அமித்ஷா..? புதிய தலைவர் நியமனம் ஆக வாய்ப்பு..!

1

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. தமிழகத்தில் திமுக தலைமையில் வலுவான கூட்டணி உள்ள நிலையில், அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் தென்பட்டுள்ளன.

கடந்த வாரம் டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய அமித்ஷா, தமிழகத்தில் 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனக் கூறி கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக சூசகமாக தெரிவித்தார். அமித்ஷாவுடனான சந்திப்பின் போது, அண்ணாமலையை பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக தலைவர்கள் வலியுறுத்தியாக சொல்லப்படுகிறது.

பாஜக தலைமையும் இதை ஏற்றுக்கொண்டு இதற்கான வேலைகளை தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலையும் சமீபத்திய பேட்டிகளில், தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட இருப்பதை கிட்டதட்ட உறுதியாக சொல்லிவிட்டார் என நினைக்கும் அளவுக்கு சொல்லிவிட்டார். பாஜகவின் அடுத்த தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என்றே வெளிப்படையாக அண்ணாமலை சொல்லியிருப்பதன் மூலம் அவர் மாற்றப்படுவது உறுதியாகியுள்ளது.

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் வரும் 9 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன. இந்த நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 10 ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வரும் 10 ஆம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா, மறுநாள் தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார் என்பதை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகளையும் பாஜக தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அதற்கான வியூகங்கள் என்னென்ன என்பது தொடர்பாகவும் தமிழக பாஜக தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like