1. Home
  2. தமிழ்நாடு

கோவை வந்தடைந்தார் அமித்ஷா..! பாஜகவினர் உற்சாக வரவேற்பு..!

1

கோவை பீளமேடு பகுதியில் பா.ஜனதா அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித்ஷா கோவை வந்துள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9.30 மணியளவில் கோவை வந்த அமித்ஷாவுக்கு கட்சி நிர்வாகிகள் பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நாளை(புதன்கிழமை) காலையில் பாஜக கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. அதைத்தொடர்ந்து அவர், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த கூட்டம் முடிந்ததும் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். மாலை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்காக நாளை மாலை 4 மணியளவில் நட்சத்திர விடுதியில் இருந்து கார் மூலம் கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து அவர், ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையம் செல்ல இருக்கிறார்.

Trending News

Latest News

You May Like