சென்னை வந்தடைந்தார் அமித்ஷா: கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு..!

தமிழக பாஜக புதிய தலைவரை நியமிக்க பாஜக தலைமை முடிவு எடுத்துள்ளது. வரும் 2026 சட்டசபை தேர்தலை கணக்கில் கொண்டு, தமிழக பாஜக தலைவர் நியமனம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலையை நீக்கிவிட்டு புதிய தலைவர் நியமிப்பதற்காக நாளை விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்றும் பாஜக தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆலோசனை செய்வதற்காகவும், 2026 தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசனை நடத்த மத்திய உள்துறை அமித்ஷா இன்று சென்னை வருகை தந்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
நேற்று இரவு 11 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்த அவரை மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், சுதாகர் ரெட்டி, பொன் ராதாகிருஷ்ணன், கரு நாகராஜன்,நயினார் நாகேந்திரன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் வரவேற்றனர். பாஜகவின் புதிய தலைவர் டூ கூட்டணி விவகாரம் வரை இன்று முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை ஆலோசனை நடக்க இருக்கும் நிலையில், அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அதிமுகவின் முக்கிய தலைவர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதேபொன்று புதிய பாஜக தலைவர் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதால் பாஜகவின் மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் சென்னையில் குவிந்துள்ளனர். அமித்ஷா பிரேமலதா விஜயகாந்த், டிடிவி தினகரன், ஓ பன்னீர் செல்வத்தை சந்திக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தொடந்து மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்துக்கு சென்று ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.