அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. திடீர் உடல்நல பாதிப்பால் பரபரப்பு !

அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. திடீர் உடல்நல பாதிப்பால் பரபரப்பு !

அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. திடீர் உடல்நல பாதிப்பால் பரபரப்பு !
X

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்த நிலையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்.

பின்னர் வீடு திரும்பிய அவர் மீண்டும் ஆகஸ்ட் 18ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த மாத இறுதியில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

வீட்டில் இருந்தே தனது பணிகளை அவர் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமித் ஷாவுக்கு மீண்டும் நேற்றிரவு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழு கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  

அடுத்தடுத்து அமித் ஷா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருவதால் பாஜக தொண்டர்கள் அச்சமடைந்துள்ளனர். 

newstm.in 

Next Story
Share it