1. Home
  2. தமிழ்நாடு

டிரம்ப் பேச்சால் அமெரிக்கர்கள் ஷாக்..! இனி இந்திய மாணவர்களுக்கு கிரீன் கார்டு..!

1

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஒருபக்கம் ஜோ பைடன், மறுபுறம் டொனால்ட் டிரம்ப் என அமெரிக்க பொதுத் தேர்தல் குறித்த அதிரடிகள் பேச்சுக்கள் அனல் பறக்கிறது. 

இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்திய நேர்காணலில் பேசியது ஒட்டுமொத்த அமெரிக்க மக்களையும், அந்நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்கள், குறிப்பாக அமெரிக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

வென்சர் கேப்பிடல் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப முதலீட்டாளர்களுடன் ஒரு போட்காஸ்டில் அமெரிக்க  முன்னாள் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அமெரிக்க கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆட்டோமேட்டிக் முறையில் கிரீன் கார்டுகளை வழங்கும் திட்டத்தைக் குறித்து அறிவித்தார். 

இது  டிரம்ப்-ன் குடியேற்ற நிலைப்பாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்பட்டு உள்ளதை காட்டுகிறது. டொனால்டு டிரம்ப் கடந்த ஆட்சியில்  வெளிநாட்டு ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தது மட்டும் அல்லாமல் அமெரிக்க மக்கள் மத்தியில் வெளிநாட்டவர்களாலேயே அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதாகவும் பேசியிருந்தார். 

Trending News

Latest News

You May Like