1. Home
  2. தமிழ்நாடு

சூப்பரான திட்டம் : தினமும் ரூ.250 முதலீடு... ரூ. 24 லட்சம் கிடைக்கும்..!

1

சேமிப்பு செய்வதில் பெரும்பாலானோர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இப்படி சேமிக்க விரும்புவர்களுக்கு எதில் முதலீடு செய்யலாம் என்பது குழப்பமாக இருக்கும். அவர்களுக்கு போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.

வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான சேமிப்புத் திட்டங்கள் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் மூலமாக பொருளாதார சேவைகளையும் தபால் நிலையங்கள் கொடுத்து வருகின்றன. நீண்ட காலம் டெபாசிட் செய்ய விரும்புவர்களுக்கு அஞ்சல் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி ஒரு பொருத்தமான திட்டம். அனைத்து வங்கிகளிலும் இத்திட்டம் உள்ளது.


பிபிஎஃப்-ல் 7.1 சதவீதம் வட்டி கிடைக்கும். குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு நாளும் சிறிய தொகையை சேமிப்பிற்காக ஒதுக்கும் போது இந்த திட்டத்தில் இணைந்து நல்ல லாபம் பார்க்கலாம். தினமும் ரூ.250 சேமித்து மாத மாதம் 7500 ரூபாய் ஒருவர் முதலீடு செய்யும் போது, ஒரு ஆண்டுக்கு டெபாசிட் ரூ.90,000 ஆக இருக்கும்.

இதனை 15 ஆண்டுகள் டெபாசிட் செய்யும் போது ஒருவர் மொத்தமாக ரூ.13,50,000 முதலீடு செய்து இருப்பார். இதற்கு 7.1 சதவீத வட்டி வழங்கப்படும். இதன் மூலமாக 10,90,926 ரூபாய் வட்டியுடன் முதலீட்டாளர் 15 ஆண்டுகளில் ரூ. 24,40,926 முதிர்வுத் தொகையாக பெறலாம். இதனை பிபிஎஃப் கால்குலேட்டரை பயன்படுத்தி கணக்கிட்டு கொள்ள முடியும்.

PPF என்பது 15 வருட திட்டம். இதில் கடன் பெற வசதியும் உள்ளது. முதலீட்டாளர் PPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் அடிப்படையில் கடன் பெற மூடியும். பாதுகாப்பற்ற கடனை விட இது மலிவானது. PPF கடனுக்கான வட்டி விகிதம் பிபிஎஃப் கணக்கின் வட்டி விகிதங்களை காட்டிலும் 1% மட்டுமே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like