1. Home
  2. தமிழ்நாடு

வியக்க வைக்கும் தகவல் : நடிகை சரோஜா தேவி இத்தனை விருதுகள் வாங்கியுள்ளாரா ?

1

தமிழ் சினிமா உலகில் 25 வருடங்களாக முன்னணி நடிகையாக விளங்கியவர் அபிநய சரஸ்வதி சரோஜாதேவி.

இவர் 1938ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்தார். 1955ல் நடிகையானார். முதலில் நடித்த படம் ‘மகாகவி காளிதாஸ்’. அந்தப் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, என 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றவர்.எம்.ஜி.ஆர். , சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகிய 3 பேருடனும் கதாநாயகியாக அதிக படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

சரோஜா தேவி வாங்கிய  விருதுகள் :

* 1969ல் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை பெற்றார்.
 

* 1992ம் ஆண்டு 'பத்மபூஷன் விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
 

* 1965-ம் ஆண்டு கர்நாடக அரசு 'அபிநய சரஸ்வதி' என்ற பட்டம் வழங்கி கவுரவித்தது.
 

* 1969ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான 'தமிழ்நாடு அரசு சினிமா விருது' 'குலவிளக்கு' திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
 

* 1980ம் ஆண்டு 'அபிநந்தனா - காஞ்சன மாலா' விருது கர்நாடக அரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
 

* 1988ம் ஆண்டு 'ராஜ்யோத்சவ விருது' கர்நாடக அரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
 

* 1993ம் ஆண்டு தமிழ் நாடு அரசு 'எம் ஜி ஆர் விருது' வழங்கி கவுரவித்துள்ளது.
 

* 1994ம் ஆண்டு தென்னகத்திற்கான 'ஃபிலிம் ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.

* 1997ம் ஆண்டு சினிமா எக்ஸ்பிரஸ் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
 

* 2001ம் ஆண்டு ஆந்திர அரசு 'என் டி ஆர் விருது' வழங்கி கவுரவித்துள்ளது.
 

* 2006ம் ஆண்டு பெங்களுரு யுனிவர்சிட்டி 'கௌரவ டாக்டர் பட்டம்' வழங்கி கவுரவித்தது.
 

* 2008ம் ஆண்டு இந்திய அரசு சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்
 

* 2009ம் ஆண்டு ஆந்திர அரசு 'என் டி ஆர் விருது' இரண்டாம் முறையாக வழங்கி கவுரவித்தது.
 

* 2009ம் ஆண்டு 'டாக்டர் ராஜ்குமார் விருது' கர்நாடக அரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
 

* 2010ம் ஆண்டு 'கலைமாமணி விருது' தமிழக அரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

Trending News

Latest News

You May Like