அத்துமீறி பேனர் வைத்த அதிமுக.. போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை !

அனுமதி இல்லாமல் பேனர் வைத்ததாக அதிமுகவைச் சேர்ந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் சாலையில் பைக்கில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ மீது பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுபஸ்ரீ மரணம் தொடர்பாக அதிமுக நிர்வாகி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து பேனர் வைக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அனுமதியின்றி பேனர் வைக்கவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், விருகம்பாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வி.என்.ரவியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி விருகம்பாக்கம் நாராயணசாமி தெருவில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எழுந்த புகாரையடுத்து, அனுமதியின்றி பேனர் வைத்ததாக அதிமுகவை சேர்ந்த கணேஷ், ரமேஷ் ஆகியோர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
newstm.in