1. Home
  2. தமிழ்நாடு

சாதனை படைத்த அமரன் வசூல்.. 10 நாட்களில் 200 கோடி கடந்து சாதனை..!

Q

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் கடந்த வாரம் தீபாவளிக்கு வெளிவந்து வசூல் வேட்டையாடி வருகிறது.

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சொல்லப்போனால் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத வசூல் சாதனைகளை எல்லாம் அமரன் செய்து வருகிறது.

இந்த நிலையில் அமரன் படம் 10 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமரன் படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே முதல் நாளில் பெரிய வசூலைப் பெற்ற திரைப்படம் இதுதான். மேலும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் முதல் 7 நாட்களில் உலகளவில் ரூ.168 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், அமரன் திரைப்படம் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.


 


 

Trending News

Latest News

You May Like