மாஸ் வீடியோவை வெளியிட்ட அமரன் படக்குழு!
'அமரன்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியன்று பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி, ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர், கவினின் பிளடி பெக்கர், துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த திரைப்படத்தில் 'மேஜர் முகுந்த் வரதராஜன்' என்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் 'அமரன்' படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த சூழலில், 'அமரன்' திரைப்படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் Heart of AMARAN இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், சாய் பல்லவியின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் 'இந்து ரெபேக்கா வர்கீஸ்' என்ற கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.