ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு திரையிடப்பட்ட 'அமரன்' திரைப்படம்!
மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ‘அமரன்’ . இந்தப் படத்தின் காட்சிகள், ‘இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்’ என்கிற புத்தகத்தின் அடிப்படையில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன், அவரது மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸாக சாய்பல்லவி நடித்துள்ளனர்.
ஜீவி.பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சி.எச்.சாய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு கலைவாணன் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார். ஆக்ஷன் காட்சிகளை ஸ்டீபன் ரிச்சர் படமாக்கியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வருகிற தீபாவளி ரிலீஸான ஜெயம் ரவியின் ‘பிரதர்’, கவினின் ‘பிளடி பெக்கர்’ ஆகிய திரைப்படங்களுடன் இந்தப் படம் வெளியாகிறது.
இந்நிலையில், இந்தத் திரைப்படம் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு டெல்லியில் திரையிடப்பட்டது. அந்தப் படத்தைக் கண்ட ராணுவ வீரர்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளனர். இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.