டைம்ஸ் ஸ்கொயர் திரையில் 'அமரன்'..!
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார்.
'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
இந்த நிலையில் அமரன் படத்தின் விளம்பரத்திற்காக நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் திரையில் அமரன் படத்தின் சில காட்சிகள் திரையிடப்பட்டன. இந்த திரையில் திரையிடப்படும் முதல் தென்னிந்திய திரைப்படமாக இப்படம் உள்ளது.
#Amaran takes center stage at Times Square NYC#AmaranDiwali #AmaranOctober31#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy
— Raaj Kamal Films International (@RKFI) October 20, 2024
A Film By @Rajkumar_KP @ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Sai_Pallavi92 @gvprakash @anbariv @RKFI… pic.twitter.com/MlVxRSaPHK