அல்லு அர்ஜுனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு..!போலீசார் கேட்ட கேள்விகள் என்ன..?
சிக்கடப்பள்ளி போலீசார் சம்மன் அனுப்பியதை அடுத்து காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் விசாரணைக்கு ஆஜரானார்.
4 மணி நேர விசாரணைக்குப் பின் காவல் நிலையத்தில் இருந்து அல்லு அர்ஜுன் புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையே விசாரணையின் போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதன் விவரங்களை நாம் பார்க்கலாம்:
ஸ்பெஷல் ஷோவுக்கு நீங்கள் வர போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது குறித்து உங்களுக்குத் தெரியுமா?
போலீஸ் அனுமதி இல்லை என்றாலும் இந்தத் திட்டத்திற்கு (ஸ்பெஷல் ஷோவில் அல்லு அர்ஜுனை பங்கேற்க வைப்பது) ஓகே சொன்னது யார்?
வெளியே கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பது குறித்து போலீஸ் அதிகாரி உங்களிடம் தகவல் தெரிவித்தாரா?
பெண்ணின் மரணம் உங்களுக்கு எப்போது தெரியும்?
உங்களுடன் எத்தனை பவுன்சர்கள் வந்தனர்? ரசிகர்களைத் தாக்கிய பவுன்சர்கள் விவரம் என்ன?
ஆகிய கேள்விகளை போலீசார் அல்லு அர்ஜுனிடம் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி மொத்தம் 20 கேள்விகளை கேட்டுள்ளனர். இதர கேள்விகளும் இரண்டு விஷயங்களை சுற்றியே இருந்துள்ளது. ஒன்று அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வர அனுமதி தரப்பட்டதா என்பது குறித்து.. அடுத்து யாருடைய அறிவுரையின் பெயரில் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வெளியே ரசிகர்களைச் சந்தித்தார். இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்தே அல்லு அர்ஜுனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.