'புஷ்பா 2’ நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்குகிறேன் - நடிகர் அல்லு அர்ஜுன்..!
சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் ‘புஷ்பா2’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை 12000 திரையரங்கில் வெளியானது முதல் பாகம் வெளியாகி ஹிட்டான நிலையில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் நடந்தது. ஆகஸ்ட் மாதமே வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம் பின்பு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் காரணமாக டிசம்பர் மாதம் தள்ளி வைக்கப்பட்டது.
படத்தின் போஸ்டர், பாடல்கள், டீசர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அட்வான்ஸ் புக்கிங்கிலேயே ரூ. 100 கோடி வசூலைப் பெற்று விட்டது ’புஷ்பா’ படத்தின் மூன்றாம் பாகமும் உறுதி செய்யப்பட்டுள்ளதால் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
இந்தப் படம் பார்க்க ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கு ஒன்றிற்கு குடும்பத்துடன் சிறப்பு காட்சி பார்க்க சென்ற பெண் ஒருவர் கூட்டத்தில் சிக்கி பலியானார். அவருடைய மகனும் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். இதுகுறித்து ‘புஷ்பா2’ படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.
படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ‘புஷ்பா2’ படத்திற்காக நேற்று இரவு திரையரங்கிற்கு வந்த பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானது செய்தி எங்கள் இதயத்தை நொறுங்க செய்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் அந்த சிறுவனுக்கும் அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கடினமான சூழலில் அவர்களுடன் எல்லா வழிகளிலும் துணை நிற்போம்’ எனத் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜூன் மற்றும் படக்குழுவின் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தெலங்கானாவில் இனி எந்தவொரு படத்துக்கும் சிறப்புக் காட்சிக்கான அனுமதி வழங்கப்படாது என அம்மாநில உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்,இந்த துயர சம்பவம் குறித்து பேசிய நடிகர் அல்லு அர்ஜுன், புஷ்பா 2 பிரீமியர் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்பவர் உயிரிழந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தோம்;அதனால், கொண்டாட்டங்களில் எங்களால் தீவிரமாகப் பங்கேற்க முடியவில்லை
ரேவதியின் குடும்பத்திற்கு எனது சார்பில் ரூ.25 லட்சம் வழங்குவேன்; எங்கள் குழுவினரிடம் இருந்து எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.
Deeply heartbroken by the tragic incident at Sandhya Theatre. My heartfelt condolences go out to the grieving family during this unimaginably difficult time. I want to assure them they are not alone in this pain and will meet the family personally. While respecting their need for… pic.twitter.com/g3CSQftucz
— Allu Arjun (@alluarjun) December 6, 2024
.png)