பெண்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதியுங்கள் - அரசு ஆணையர் புதிய யோசனை!!
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வீட்டில் இருந்தே பணிபுரியும் முறை தமிழ்நாட்டில் அதிகரித்தது.தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேர ஷிப்ட் பணிகளில் கூட அதிக அளவு ஈடுபட்டு உள்ளனர். இவர்களின் நலனைக் காக்க தமிழக மாநில தொழிலாளர் நலத்துறை செயலர் ஒரு புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதன்படி, குடும்ப பொறுப்பு அதிகரிக்கும் நேரங்களில் பெண் பணியாளர்களை வீட்டில் இருந்தவாறு பணியாற்ற அனுமதிக்கலாம் என தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜெயந்த் யோசனை தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்தியாவில் பணிபுரியும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழக பெண்கள் என்பதால் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதித்தால் அவர்களது முன்னேற்றத்திற்கும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்" என்றும் அவர் கூறினார்.