தமிழக விவசாயிகளிடம் காய்கறி கொள்முதலை அனுமதியுங்கள்.. தமிழக அரசுக்கு கேரள முதல்வர் கடிதம் !
இந்தியாவில் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டது கேரளா மாநிலம். எனினும் அங்கு வெளிமாநிலத்தில் இருந்து கிடைக்கக்கூடிய அத்தியாவசியப்பொருட்கள் கிடைப்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கேரளாவுக்கு தமிழகத்தில் இருந்துதான் காய்கறி செல்லவேண்டும். ஆனால் தற்போது அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கடிதத்தில் எழுதியிருந்தார்.
அதில், தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு கிடைக்கும் இடங்களில் நேரடியாக கொள்முதல் செய்து, மக்களுக்கு அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டம் கடந்த 2018-19 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு விலையை கட்டுப்படுத்தி, விநியோகிக்க ரூ.500 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கேரளாவை பொருத்தவரை சப்ளைகோ, ஹார்ட்டிகார்ப், கன்ஸ்யூமர்பெட் ஆகிய முகவர் அமைப்புகள் மூலம், தமிழகத்தில் உள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் சங்கங்களிடம் இருந்து தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கை நேரடியாக கொள்முதல் செய்வதுடன், அவர்களுக்கு உரிய விலை வழங்கி வருகிறது.
இந்த 3 அமைப்புகளும் தமிழகத்தில் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் சங்கங்களிடம் இருந்து இவற்றை நேரடியாக கொள்முதல் செய்ய வசதி செய்துதர வேண்டுகிறேன் என தமிழக அரசுக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில்பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
newstm.in