1. Home
  2. தமிழ்நாடு

யாருடன் கூட்டணி? - இன்று பொதுக்குழுவில் முடிவு..!

1

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன. குறிப்பாக, திமுக - காங்கிரஸுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்து, கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனும் பேச்சுநடத்த உள்ளது. இதற்கிடையே,  அதிமுகவும் தொகுதி பங்கீட்டு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களை அமைத்து தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு அடுத்ததாக பெரிய கட்சியாக கருதப்படும் பாமக, இதுவரை மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ம.க.மற்றும் தேமுதிகவுடன், அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாமக, மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்தக் கட்சியுடனும் இன்னும் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கில் இன்று பா.ம.க.சிறப்பு பொதுக்குழு கூடும் நிலையில், எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்பது பொதுக்குழுவில் ஆலோசித்த பிறகே முடிவு செய்யப்படும் என்றும் பா.ம.க.தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்தியில் பா.ஜ.க. கூட்டணியில் நீடிப்பதாக அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டிருந்த நிலையில், பா.ஜ.க. கூட்டணியை தொடருமா? அல்லது தமிழ்நாட்டில் எந்த கட்சியுடன் கூட்டணி என அறிவிக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like