சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணியா ? சீமான் எடுத்த அதிரடி முடிவு..!
தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது,
2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். தற்போது 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளேன். மற்ற தொகுதி வேட்பாளர்களையும் தேர்வு செய்து வருகிறேன் என கூறினார் மேலும் கார் பந்தயம் என்பது மேல்தட்டு மக்களின் விளையாட்டு, சென்னையில் நகரின் மையப்பகுதியில் ஏன் பார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த வேண்டும்? . அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்க காசில்லை என்கிறார்கள். ஆனால், கார் பந்தயம் நடத்த மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது.என தெரிவித்தார்.