1. Home
  2. தமிழ்நாடு

த.வெ.க-யுடன் கூட்டணியா ? நாளை அறிவிக்கிறேன் - ஓபிஎஸ்..!

1

கடந்த சில நாட்களாக தேசிய ஜனநாயக கூட்டணியை முறித்துக் கொண்டு ஓபிஎஸ், தவெகவுடன் கைகோர்ப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றன. குறிப்பாக, தவெகவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், அந்த கட்சியில் அனுபவம் மிக்க தலைவர்கள் இல்லாததால், ஓபிஎஸ்ஸுடன் கூட்டணி வைத்தால் அது அக்கட்சிக்கு பக்கபலமாக இருக்கும் எனவும் பேசப்பட்டது.

இது ஒறுபுறம் இருக்க,  ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன.  பா.ஜ.க. கூட்டணியில் இடம் கிடைக்காததால் அடுத்தகட்டம் குறித்து நிர்வாகிகளிடம் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னையில் நாளை காலை செய்தியாளர் சந்திப்பில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறேன். த.வெ.க.வுடன் கூட்டணி உள்ளிட்ட கேள்விகளுக்கு நாளை பதில் சொல்கிறேன் என்றார்.

Trending News

Latest News

You May Like