பாஜகவுடன் கூட்டணியா? இல்லையா? நாளை ஓ.பன்னீர்செல்வம் முக்கிய அறிவிப்பு..!

அதிமுக - பாஜக கூட்டணி
அமைந்த பின்னர், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. சமீபத்தில் கூட சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பல்வேறு கட்சியினர் சந்தித்து பேசினர். அப்போது அமித் ஷாவை சந்திக்கிறீர்கள் என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்களிடம் கேட்கையில், ஆண்டவனுக்கே வெளிச்சம் என்றார்.
அதேசமயம் எடப்பாடி பழனிசாமி உடன் ஒரே மேடையில் அமர்ந்து கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட போது, இந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இடம்பெறுவார்களா? என்று அமித் ஷாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அதிமுகவின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடப் போவதில்லை.
தேர்தல் விஷயங்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமர்ந்து பேசி திட்டமிடுவோம் என்று அதிரடியாக பதிலளித்தார். எனவே எடப்பாடி பழனிசாமி தரப்பு எடுக்கும் முடிவில் தான் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் அமைந்திருக்கிறதோ? பாஜக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையில் சுமூக உறவு இல்லையோ என்ற கேள்வியை எழுப்பியது. இதுபற்றி ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ வைத்திலிங்கம் சற்றுமுன் அளித்த பேட்டியில், நாளைக்கு தான் கூட்டம் முடிவடைகிறது.
முடிந்ததும் நாலை மாலை அண்ணன் ஓபிஎஸ் உங்களை சந்திப்பார் என்றார். மேலும் பேசுகையில், இந்த கூட்டத்தில் அதிமுக உரிமை மீட்பு குழு, 2026 சட்டமன்றத் தேர்தல், கட்சியின் வளர்ச்சி ஆகிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. எங்களை தவிர்க்க முடியாது என்று பதிலளித்து விட்டு சென்றார். எனவே ஓபிஎஸ் தரப்பு முக்கிய முடிவெடுத்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.