1. Home
  2. தமிழ்நாடு

இன்று உங்க அனைத்து விஷயங்களுக்கும் பதில் அளிக்கப்படும் – ஓ. பன்னீர் செல்வம்..!

1

அதிமுக – பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்தே அந்தக் கூட்டணியில் ஏற்கனவே அங்கம் வகித்துவந்த டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் தொடர்வார்களா எனும் கேள்வி இருந்துவருகிறது.

இந்தச் சூழலில்தான், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் கேட்டு, ஓ. பன்னீர் செல்வத்திற்கு வழங்கப்படவில்லை என்பது பேசு பொருளாக மாறியது.  இதனிடையே, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதியை விடுவிக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டதும் அனைவரின் கவனத்தையும் பெற்றது.

எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கியதும், தனக்கு நேரம் ஒதுக்காததும் ஓ.பன்னீர் செல்வத்தை அதிருப்தியில் ஆழ்த்தியதாகவும் பரவலாக பேசப்பட்டது. இந்தநிலையில், தனது அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த ஆலோசனைக்காக சென்னைக்கு வர, மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், “அனைத்து விஷயங்களுக்கும் நாளை அதாவது இன்று (ஜூலை 31) காலை சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளிக்கப்படும்” எனத் தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

Trending News

Latest News

You May Like