இனி செல்போன் இருந்தா போதும்…அரசு பேருந்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம்..!

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் விழுப்புரம், திருநெல்வேலி, கும்பகோணம், சேலம், மதுரை மற்றும் கோவை ஆகிய ஏழு போக்குவரத்து கழகங்களில் நிறுத்தத்திற்கு வரும் நேரம், அங்கிருந்து புறப்படும் நேரம் குறித்த விவரங்கள் அனைத்தையும் செல்போன் செயலி மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள், பேருந்து வழித்தடங்களில் பேருந்துகளின் வருகை மற்றும் புறப்படும் நேரம் குறித்த தகவல்கள் இந்த செயலியில் வழங்கப்படும்.
அதே சமயம் இந்த டெண்டரில் ஏழு போக்குவரத்து கழகங்களுக்கான வடிவமைப்பு, மேம்பாடு,செயல்படுத்தும் மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் வாகன திட்டமிடல் ஆகிய அம்சங்கள் இருக்கும். இந்த புதிய வசதி 2213 புதிய டீசல் பஸ்கள், 500 மின்சார பேருந்துகளில் செயல்படுத்தப்படும் எனவும் இந்த வசதி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.