கனிமொழி எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழப்பு..?
2019 தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார் கனிமொழி. அதிமுக - பாஜக கூட்டணி சார்பாக அப்போது பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர் ராஜன் களமிறங்கினார். அவரை எளிதாக வீழ்த்தி மக்களின் பேராதரவுடன் பாராளுமன்றம் சென்றார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலேயே தொடர்ந்து வலம் வந்த அவர், மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றினார். தூத்துக்குடி மழை வெள்ளத்தின் போது இவருடைய பணி குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது.
மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாட்டின் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் எம்.பி. ஆகவுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.