1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் மோடி பிரதமரானால் இதெல்லாம் நடக்கும்: பட்டியலிட்ட நிர்மலா சீதாராமன்..!

Q

இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் விக்சிட் பாரத் என்ற தலைப்பில் கருத்தரங்களு நேற்று நடந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியதாவது:
நரேந்திர மோடி 3வது முறையாகப் பிரதமராக பதவி ஏற்றால் உற்பத்தித்துறையில் அனைத்துக் காரணிகளிலும், நிலம், தொழிலாளர் என அனைத்திலும் சீர்திருத்தம் கொண்டுவரப்படும். 3வது முறை மோடி பிரதமராக வந்தால் இதற்குத்தான் முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளி்க்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் இந்தியாவை உலகப் பொருளாதாரத்தில் 3வது பெரிய நாடாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கில், 21வது நூற்றாண்டு காரணியான டிஜிட்டல் கட்டமைக்குப்பும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
முக்கியமாக நீண்டகாலமாக நிலம் தொடர்பான சீர்திருத்தங்கள் நிலுவையில்உள்ளன. பெரிய கட்டமைப்புத் திட்டங்களுக்கும், தொழிற்சாலை, பாலங்கள் அமைக்கவும், நெடுஞ்சாலை அமைக்கவும் நிலம் கையகப்படுத்துவது பெரிய சிக்கலாக இருந்து வருகிறது.
கடந்த 2015ம் ஆண்டில் நிலம் கையகப்படுத்தும் சட்டம் 3 முறை அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டும் அது சட்டமாகவில்லை.
இது முறைப்படி சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு சட்டமாக்கப்படும். அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்கள் என்பது நிச்சயமாக நடக்கும். 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் ஏராளமான தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. ஆனாலும், அனைத்து மாநிலங்களிலும் இந்தச் சட்டங்கள் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.
உற்பத்தி துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும். விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, கிட்டங்கி வசதி, வேளாண் சேமிப்பு கிட்டங்கி வசதி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து சீர்திருத்தங்கள் செய்யப்படும்.
வேளாண் பொருட்களுக்கு மதிப்புக் கூட்டுப் பொருட்களாக மாற்றத் தேவையான சீர்திருத்தங்கள், சிறந்த உற்பத்தியை பெருக்குதல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தி, ஊக்கப்படுத்துதல் ஆகியவை எங்களின் அடுத்த ஆட்சியில் முக்கிய இலக்காக இருக்கும்
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

Trending News

Latest News

You May Like