1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் வரும் 30ஆம் தேதி வரை இதற்கெல்லாம் தடை!

சென்னையில் வரும் 30ஆம் தேதி வரை இதற்கெல்லாம் தடை!


கொரோனா பொதுமுடக்கத்தின் ஒரு அங்கமாக சென்னையில் பல்வேறு தடைகளை விதித்து மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பொதுமுடக்க தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள், திருமணம், இறுதி ஊர்வலம், படப்பிடிப்பு உள்ளிட்டவற்றிற்கு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

நவம்பர் 16ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதி அளவு நிரப்பி திரையரங்குகளை இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு சீட் இடைவெளிவிட்டு அமர்வது அவசியம்.

அதே போல், புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவை, மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகரில் வரும் 30ஆம் தேதி வரை பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட தடை விதித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் வரும் 15ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், பேரணி, மனித சங்கிலி நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like