1. Home
  2. தமிழ்நாடு

7 கோள்களும் வானில் ஒரே நேர்கோட்டில்...அடுத்து 2040ல் தான்...எங்கு..எப்போது பார்க்கலாம்?

1

பிப். 28ஆம் தேதி நமது சூரிய குடும்பத்தின் 7 கோள்களும் வானில் ஒரே நேர்கோட்டில் வர இருக்கின்றன. இதனை பூமியில் இருந்தே நாம் வெறும் கண்களில் பார்க்க முடியுமாம்.

இந்த அரிய வானியல் நிகழ்வு அடுத்து 2040ஆம் ஆண்டில்தான் நிகழும் என்கின்றனர் விஞ்ஞானிகள். கோள்களின் அணிவகுப்பு கடந்த மாதமே தொடங்கியதாக கூறப்படும் நிலையில், வரும் பிப். 28ஆம் தேதி உச்சத்தை அடைந்து 7 கோள்கள் நேர்கோட்டில் சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சூரிய குடும்பத்தின் புதன் (Mercury), வெள்ளி (Venus), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Saturn), யுரேனஸ், நெப்டியூன் உள்ளிட்ட 7 கோள்கள் வானத்தில் ஒரே நேர்கோட்டில் வருகின்றன. நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட கோள்கள் இதுபோன்ற ஒரே நேர்கோட்டில் வருவது இயல்பானதில்லை என்றும் இது நடப்பது அரிது என்றும் நாசா கூறுகிறது. இதன் சிறப்பே இதனை நீங்கள் வெறும் கண்களாலும் பார்க்கலாம் என்பதுதான்.

7 கோள்களின் அணிவகுப்பை நீங்கள் பிப். 28ஆம் தேதி அன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின் 45 நிமிடங்களில் இருந்து கண்டு ரசிக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். சூரியன் மறைந்த பின்னர் புதன் (Mercury), வெள்ளி (Venus), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter) ஆகிய கோள்களை நீங்கள் வெறும் கண்களால் பார்க்கலாம். ஆனால், சனி (Saturn), யுரேனஸ், நெப்டியூன் உள்ளிட்ட கோள்கள் நீங்கள் வெறும் கண்களால் பார்க்க இயலாது. நல்ல பைனாக்குலர் கொண்டோ அல்லது டெலஸ்கோப் கொண்டோ நீங்கள் அவற்றை பார்க்கலாம்.

இந்தியாவிலும் இந்த கோள்களின் அணிவகுப்பை நன்றாக காணலாம். பல்வேறு நகரங்களில் இதனை தெளிவாக காணலாம். பல்வேறு நகரங்கலில் உள்ள பிர்லா கோளரங்கம் போன்ற வானியல் சார்ந்த இடங்களில் இருக்கும் டெலஸ்கோப் மூலமும் இந்த அணிவகுப்பை நீங்கள் காணலாம். வெளிச்சம் அதிகம் இல்லாமல் இருள் சூழ்ந்த பகுதிகளில், காற்று மற்றும் ஒளி மாசுபாடு இல்லாத பகுதிகளில், வானத்தை பார்ப்பதில் எவ்வித தடங்கலும் இல்லாத பகுதிகளில் நீங்கள் இந்த கோள்களின் அணிவகுப்பை கண்டு ரசிக்கலாம். 

Trending News

Latest News

You May Like