அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வியாபாரிகள் அஞ்சலி..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை காலமானார். அவரது உடல் சென்னை தீவுத்திடல் பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள், திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மறைந்த விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று கடையடைப்பு செய்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதே போல் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வியாபாரிகள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
கடந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் எம்எல்ஏவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.