நாளை மறுநாள் ரேஷன் கடைகள் இயங்குமா ?
உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:“உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லை.
ஆனால், இம்மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி அனைத்து நியாயவிலைக் கடைகளும் இயங்கும்.
அன்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி ஆகஸ்ட் மாதத்துக்கான பொருட்கள் பெறாத அட்டைதாரர்கள் பெற்று பயனடையலாம்,” என்று அவர் கூறியுள்ளார்.