1. Home
  2. தமிழ்நாடு

டிடிஎப் வாசனுக்கு சவால் விடுத்த பிரபல பைக் வீராங்கனை அலிஷா அப்துல்லா..!

1

யூடியூப்பில் பைக் ஓட்டும் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமானவர் டிடிஎப் வாசன். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் யூடியூப்பில் இவருக்கு 30 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவர் பாதுகாப்பின்றி அதிவேகமாக பைக் ஓட்டி வீடியோ பதிவிடுவதால்  ரசிகர்களை தவறாக வழிநடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த மாதம் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அத்துடன்  டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரபல கார் மற்றும் பைக் ரேஸரான அலிஷா அப்துல்லா  டிடிஎப் வாசன்  பைக் வைத்துக்கொண்டு சீன் தான் போட முடியும் .ரேஸ் ஓட்ட முடியாது நான் அவருக்கு ஓப்பனாக சேலஞ்ச் விடுகிறேன் . நாங்கள் ப்ரொபஷனல் ரேசர்.  நாங்க மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கிறோம்.  நாங்கள் பல விஷயத்தை தியாகம் செய்கிறோம்.  

ரேசிங் என்பது எங்கள் ரத்தம் போன்றது.  அவரை எங்களுடன் ஒப்பிடாதீர்கள் . அவர் ஒரு என்டர்டைனர் . அவர் ஒரு ஜோக்கர். அதனால் ஒரு விளையாட்டு வீரரையும் ஒரு ஜோக்கரையும் ஒப்பிடாதீர்கள் என்று கூறியுள்ளார். 

Trending News

Latest News

You May Like