அலர்ட்...! 1921 என்ற நம்பரில் இருந்து போன் வந்தால் என்ன செய்ய வேண்டும்!?

அலர்ட்...! 1921 என்ற நம்பரில் இருந்து போன் வந்தால் என்ன செய்ய வேண்டும்!?

அலர்ட்...! 1921 என்ற நம்பரில் இருந்து போன் வந்தால் என்ன செய்ய வேண்டும்!?
X

மத்திய அரசு நாடு முழுவதும் தொலைபேசி வாயிலாக கொரோனா பரவல் குறித்த ஆய்வு ஒன்றை நடத்த உள்ளது.

அதன்படி 1921 என்று தொலைபேசி எண்ணிலிருந்து நாட்டு மக்கள் அனைவரும் தொடர்பு கொள்ளப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிலிருந்து அதிகாரிகள் தொடர்புகொள்ளும்போது மக்கள் அவர்களின் கேள்விகளுக்குச் சரியான தகவல்களைக் கூற வேண்டுமென அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அழைப்பு வரும்போது, கொரோனா அறிகுறி, பரவல் குறித்த சரியான பதிலை மக்கள் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


தொலைப்பேசி அழைப்பின் போது கொரோனா அறிகுறிகளை தெரிவித்தால், அவர்களுக்கு உரியப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 1921 என்ற அதிகாரப்பூர்வ எண்ணைத் தவிர மற்ற எண்களிலிருந்து யாராவது அழைத்து கொரோனா குறித்து கேட்டால், பதிலளிக்க வேண்டாம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. 

newstm.in

Next Story
Share it