மக்களே அலெர்ட்..! வரும் 25ம் தேதி உருவாகிறது "சக்தி" புயல்..!
மே 25ம் தேதி புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை அதிகாரி ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா கடலோர பகுதிகளில் மே 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அத்தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மே 25/26ம் தேதிவாக்கில் புயலாக வலுபெறக்கூடும்.
இப்புயலிற்கு இந்திய வானிலை மையம் சக்தி Shakthi என்று பெயரிட உள்ளது. இப்புயலின் காரணமாக கேரளா தமிழ்நாடு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை மே 24ம் தேதி துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் மே 25ம் தேதியும், ஆந்திரா தெலுங்கானா ராயல்சீமா உள்ளிட்ட ஒட்டுமொத்த தென் இந்தியாவிலும் மே 28ம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழை துவங்க சாதக சூழல் காணப்படுகிறது என தெரிவித்தார்.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் விரைவில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது" என வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.