மதுபோதையில் தகராறு.. காதல் மனைவியை ஒரே அடியில் கொன்ற கொடூர கணவன் !

தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி மந்தையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. பிரபாகரன் மதுபழக்கம் கொண்டவர் என்பதால் வீட்டிற்கு அடிக்கடி மதுபோதையில் வருவார். இதனால் தம்பதி இடையே சிறு, சிறு சண்டைகள் அரங்கேறி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவும் அவர் வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த பிரபாகரனிடம் கவிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் பலமாக தாக்கியதில் கவிதா தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் பார்த்தப்போது அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in