#BIG NEWS :- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16ம் தேதி நடைபெறாது..!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை வழிகாட்டு நெறிமுறைகள் உடன் நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16ம் தேதிக்கு பதில் 17-ம் தேதி நடைபெறும். திட்டமிடப்பட்ட படி ஜனவரி 16-ம் தேதி முழு ஊரடங்கு என்பதால் அதற்கு அடுத்த நாள் ஜல்லிக்கட்டு நடைபெறும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.