ஜல்லிக்கட்டு போட்டிக்காக அமைக்கப்படும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் - மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகளவில் பிரபலமானது. இந்த ஜல்லிக்கட்டைக் காண லட்சக்கணக்கானோர் வருவது வழக்கம். மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் பார்வையாளர்கள், காளைகள், மாடுபிடி வீரர்களுக்குப் போதுமான இடவசதி செய்து கொடுப்பதில்லை. இதனால் பார்வையாளர்கள் மரங்களில் ஏறியும், வீடுகளின் மாடிகளில் நின்றும் ஆபத்தான முறையில் ஜல்லிக்கட்டை பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 10 ஆயிரம் பேர் பார்க்கும் அளவில் பிரமாண்ட நிரந்தர பார்வையாளர்கள் ஸ்டேடியம் அமைக்கப்பட்டுவருகிறது. இந்த ஸ்டேடியத்தின் மாதிரி புகைப்படங்களை ஜல்லிக்கட்டு மைதானத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் அதன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதனை கண்ட பலரும் அசந்து பாராட்டிவருகின்றனர்.
Madurai Jallikattu stadium design by A plus R architects with PWD DEPARTMENT @TNDIPRNEWS @mkstalin @evvelu #Chandramohanias #ias #aplusrarchitects #madurai #alaganallur #jalikattu @MID_TEMPLECITY @UpdatesMadurai pic.twitter.com/qi92X3RW2j
— chenthur raaghav (@chenthurraaghav) October 25, 2023