ஏகேவின் ’குட் பேட் அக்லி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

குட் பேட் அக்லி திரைப்படம் 10ஆம் தேதி வெளியானது.அஜித்குமார் உடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில், பிரசன்னா, சிம்ரன், ஜாக்கி ஷெரஃப், யோகி பாபு, பிரியா வாரியர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்திருந்தது. படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வர இருக்கும் நிலையில் படத்தின் வசூல் 7 நாட்களில் 280 கோடியை தாண்டி உள்ளது.
இந்த நிலையில் இந்த படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்ன ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் படத்தை ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருக்கும் நிலையில் எப்போது படம் ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தின் வெளியிட்டு உரிமையை பெற்றிருக்கிறது. தற்போது வசூலில் பட்டைய கிளப்பி வருவதால் படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
அதாவது நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்னி திரைப்படம் வரும் மே மாதம் 8ம் தேதி முதல் நேற்று தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவித்துள்ளனர். மேலும் ஆங்கில சப்டைட்டில் உடனும் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.