1. Home
  2. தமிழ்நாடு

ராஜினாமா செய்தார் அகிலேஷ் யாதவ்..!

1

பா.ஜ., ஆளும் உ.பி.,யின் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஆக அகிலேஷ் யாதவ் இருந்து வருகிறார். உ.பி.யின் மெயின்புரி மாவட்டத்தின் கர்ஹால் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் அகிலேஷ் இருந்தார். திடீரென தன் முடிவை மாற்றிய அகிலேஷ் யாதவ், லோக்சபா தேர்தலில் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் வெற்றி பெற்று, அகிலேஷ் எம்.பி ஆனார். இதனால் அவர் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால், உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்துள்ளார்.மக்களவைத் தேர்தலில் கன்னௌஜ் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வாகியுள்ள நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

மக்களவையில் 37 உறுப்பினர்களைக் கொண்ட மூன்றாவது பெரிய கட்சியாக சமாஜவாதி உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியில் மக்களவைக் குழுத் தலைவராக அகிலேஷ் யாதவ் செயல்படவுள்ளார்..சமாஜவாதி தலைமையில் உபியில் அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களவைத் தேர்தலில் அம்மாநில ஆளுங்கட்சியான பாஜகவுக்கு எதிராக பெரும் வெற்றியை பதிவு செய்தது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது கர்ஹல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவ், தனது எம்பி பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like