இலங்கையின் அதிபராகும் ஏகேடி? யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க?
அனுர குமார திஸாநாயக்க பொதுவாக ஏகேடி என்று இலங்கை அரசியலில் அழைக்கப்படுகிறார். அவர் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனதா விமுக்தி பெரமுனா (2014 முதல்) மற்றும் தேசிய மக்கள் சக்தி (2019 முதல்) ஆகியவற்றின் தற்போதைய தலைவரும் ஆவார். 2019 இல் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரான இவர்.. மீண்டும் 2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தற்போது வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.
இலங்கையில் நடந்த மக்கள் புரட்சி போராட்டத்திற்கு இவர் முக்கியமான காரணமாக இருந்தார். இலங்கையில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தார். அங்கே பணத்தின் மதிப்பு சரிந்தது, 16 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு போன்ற விஷயங்களுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை மேற்கொண்டார்.
இதனால் அவர் மக்கள் இடையே புரட்சி நாயகனாக பார்க்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 3.16% வாக்குகளை பெற்றார். தற்போது அனுரகுமார திஸாநாயக்க 4,99,048(52.25%) வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். சஜித் பிரேமதாச 2,10,701(22.06%), ரணில் விக்கிரமசிங்க 1,80,983(18.95%) வாக்குகள் பெற்றுள்ளனர்