ஆகாசவாணி வெங்கட்ராமன் காலமானார்...!

பழம்பெரும் செய்தி வாசிப்பாளர் ஆகாசவாணி வெங்கட்ராமன் மறைந்தார்.ஆகாஷவாணியில் (வானொலி) செய்தி வாசிப்பாளராக 50 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய R.S.வெங்கட்ராமன் (102) காலமானார். இவர் தமிழ் செய்திப் பிரிவின் பொறுப்பாளராக இருந்தவர்
தமிழகத்தின் மன்னார்குடி அருகே உள்ள ராதா நரசிம்மபுரத்தினை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி டெல்லியில் ஆகாஷ்வாணியின் தமிழ் செய்தி பிரிவில் செய்தி வாசிக்கும் பணியை தொடங்கினார். 1947 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த போது அது குறித்த செய்தியினை வாசித்தவரும் இவர்தான். இவர் ஆகாஷ்வாணியில் இருந்து 1985 ஆம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெற்றார். தொடர்ந்து வயது மூப்பின் காரணமாக இன்று சென்னையில் காலமடைந்தார். இவருக்கு ஊடகவியலாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.