AK 62 படத்தின் டைட்டில் விடா முயற்சி ?
அஜித் நடிப்பில் இந்த வருடம் பொங்கல் தினத்தில் துணிவு படம் வெளியானது. 10 வருடங்களுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய்யின் படம் ஒரே நாளில் வெளியானதால் திரையரங்குகள் விழாகோலமாக இருந்தது. துணிவு படம் விஜய்யின் வாரிசு படத்துடன் இணைந்து வெளியானது. இந்த படம் வெளியாவதற்கு முன்னரே அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்றும், லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அஜித்தின் மிகப்பெரிய ரசிகரான விக்னேஷ் சிவன் இந்த அறிவிப்பை மிகவும் உற்சாகத்துடன் தெரிவித்து வந்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவனின் கதை லைக்கா நிறுவனத்திற்கு பிடிக்காததால் அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து அவர் வெளியேறினார்.
இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது, இருப்பினும் இதற்கும் அஜித்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு கதை பிடிக்கவில்லை என்றும் விக்னேஷ் சிவன் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். மேலும் சமீபத்தில் அஜித்தின் தந்தை இறந்ததால் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு தள்ளி போனது. ஏகே 62 படத்தின் இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது. விஷ்ணுவர்தன் தான் இந்த படத்தை இயக்கப் போகிறார் என்று கூறப்பட்ட நிலையில் மகிழ் திருமேனி இயக்க உள்ளார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் மே ஒன்றாம் தேதியான நாளை அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஏகே 62 படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு 'விடா முயற்சி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.