1. Home
  2. தமிழ்நாடு

அஜித் பிரேத பரிசோதனையில் பகீர்..! மண்டையோட்டில் அடி, 'சிகரெட் சூடு; மூளையில் ரத்தக்கசிவு...

Q

போலீசாரால் தாக்கப்பட்டு இறந்த பத்ரகாளியம்மன் கோவில் தனியார் நிறுவன காவலாளி அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை பின்வருமாறு: அஜித்குமாரின் உடலில், 50 வெளிப்புற காயங்கள் இருந்தன. இதில், 12 சிராய்ப்பு காயங்கள், மீதி ரத்தக்கட்டு காயங்களாக இருந்துள்ளன.

ரத்தம் கன்றிய காயங்கள் ஒவ்வொன்றும் ஒரு காயமாக இருந்தாலும், அந்த காயத்தினுள்ளே பல்வேறு ரத்தக்கட்டு காயங்கள் அடங்கியுள்ளன. வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்திய காயத்துடன் மண்டையோட்டில் அடியும், மூளையில் ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது. சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட புண் இருந்தது. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் அடித்ததால், ரத்த காயம் பல வகையாக காணப்படுகிறது.

தரையில் இழுத்துச்சென்றதால் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது போலீசார் அடிக்கும் போது தற்காத்துக் கொள்ள போராடி இருந்ததாலும் சிராய்ப்புகள் ஏற்பட்டு இருக்கலாம். தொடர்ந்து, பல மணி நேரம் கும்பலாக சேர்ந்து இந்த சித்ரவதையை நடத்தி இருக்கலாம்.

இவ்வாறு, அறிக்கை தெரிவிக்கிறது.

Trending News

Latest News

You May Like