#BREAKING : மிரட்டலாக வெளியான அஜித்தின் விடாமுயற்சி டீசர்..!
துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகின்றார்.அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசன்டரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் விடாமுயற்சி படப்பிடிப்பு தாமதம் ஆனது இதனால் அஜித் தனது அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தில் நடித்து வந்தார்.
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் கோலிவுட் வட்டாரத்தில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்றும், குட் பேட் அக்லி திரைப்படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி ரிலீஸ் செய்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் விடாமுயற்சி டீசர் குறித்து வெளியாகியிருக்கும் தகவலின் படி, அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி படத்தின் டீசர் இன்று இரவு 11.08 PM மணிக்கு, சன் டிவி யூடியூப் சேனலில் வெளியாகும் என தெரியவந்துள்ளது.
இதோ அந்த டீஸர் உங்களுக்காக