அஜித் படத்திற்கு வந்த சிக்கல்..! ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்..!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை சுருக்கமாக ஆங்கிலத்தில் GBU என்று அவரது ரசிகர்களும் திரைத்துறையினரும் அழைத்து வருகின்றனர்.
படம் வசூலில் கோடிக்கணக்கில் குவிக்க, விமர்சன ரீதியாக வெற்றி, தோல்வி பற்றி கருத்துகளை பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். படத்தில் ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ ஆகிய 3 பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில் படத்தில் இந்த 3 பாடல்களை பயன்படுத்தியதற்காக தமக்கு இழப்பீடாக ரூ.5 கோடி தரவேண்டும் என்று கூறி மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
3 பாடல்களையும் படத்தில் உடனடியாக நிறுத்த வேண்டும், 7 நாட்களுக்குள் படக்குழுவினர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் அவர் குறிப்பிட்டுள்ளார்.